Blue Flower

Do you know minimalism?

J.Punitha Kumar, B.com. LL.B, Advocate, Vellore.
----+++++---+-++++++++++

*'மினிமலிஸம்'*
நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !
------------------
``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார்.
வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க .
நாலு பேரையும் *நல்லாப் படிக்க வச்சு,* அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு,
கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும்
கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.*

ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன்.
*ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."*

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க
முடிகிறது.

*இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.*

அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்;
பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..!
*மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.*

_இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர்தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும்._

2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ்
ஐ.டி பசங்க ! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம்
என வாழ்வில் எல்லாமே ஓகேதான்.

*ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள்.*
வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது.

வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில்
எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள்.

*மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட* *நொடியில் `மினிமலிசம்'* என்கிற கான்செப்ட் பிறக்கிறது.*

_இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது._

*பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது.*

உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.

*இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும்.*

*_2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள்._*

லட்சக் கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

*~மினிமலிஸம் என்றால் கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள்.~*

*எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை.*

*_மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது._*

_உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும்._

இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது
இந்த *அவசியமில்லா நுகர்வுதான்.*

_அதென்ன அவசியமில்லா நுகர்வு?_

*நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்துகிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.*

*_மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்_'* என்பது ஜோஷூவாவின் கருத்து.

மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

வீட்டில் தேவையில்லாமல்
ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும்.

அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம்.

இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின்
வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான்.
*வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார்.*

1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய *அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார்.* *_`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்'_* என்கிறார் பஃபெட். *_அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்._*

~மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன?~

ஜோஷுவாவே 5 விஷயங்களை எழுதியிருக்கிறார்.

*1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல்* :-
- மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான்.
நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது.
*அதற்கு ஒரே வழி திட்டமிடல்.* செலவழிக்கிற
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

*2 - குறைவான பொருள்களில் வாழ்வது* :-
- வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்.அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, *அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.*

*3 வருங்காலத்திற்குத் திட்டமிடல்* :-
- மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து *எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.*

*4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது* :-
- எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன்
இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு *அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும்* வாங்குவது.

*5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது* :-
*_உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதுதான் என்பது ~வாரன் பஃபெட்~ தொடங்கி ~பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே~ பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா._*
_மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள்._ *_அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்._*

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும்.
கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை
வாழவும் உதவும்.

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.
அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும்
சிறப்பாக வாழமுடிந்தது.
*_நானும் அவ்வாறே வாழ விழைகிறேன் !_*
-------------------
நன்றி 🙏

*5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு உப்பு.*

*3 நிமிடம் , உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.*

ஒரு கூட்டம்,

*இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார்* டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.

மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.

பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

*சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.*

*காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.*

வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.

*நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.*

பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.

பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.

வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.

உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.

அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.

அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.

இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.

அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.

எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.

கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.

அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:

“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

*“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.*” “

நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘

2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.

இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.

போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.

இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.

*நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.*

*வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள்.*

ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்

அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.

ஆனால்

*எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!*

மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம். Kinldy forward to all without FAIL. SAVE your self and your family and friends [truncated by WhatsApp]
இதனை ஏற்கனவே படித்திருந்தாலும் ,

*மாற்றம் வரும்வரை*
*மீண்டும் மீண்டும்*
*பகிரவேண்டும்*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

*அriceரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சக்கரை நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.

11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.யோக சக்தியையும் தரும்.

12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்

https://t.me/joinchat/KgPP7xSjLQOjZ9jQ1vQLGw

*ஐம்பது வகையான பாரம்பரிய அரிசி வகைகள் , சிறு தானியங்கள், நவ தானியங்கள் முளைகட்டிய தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்*

*எட்டு மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்*

*அரைத்த மாவாகவும் மற்றும் தானியமாகவும் கிடைக்கும் நீங்களே அரைத்தும் கொள்ளளாம்*

🏋‍♂🏋‍♂🏋‍♂ *தமிழன் பாரம்பரிய சத்துமாவு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்*🏋‍♂🏋‍♂🏋‍♂

*ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.*

1. உடல் வலிமையாகும்

2. உடல் உறுதியாகும்

3. எலும்பு உறுதியாகும்

4. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்

5. நியாபகசக்தி அதிகரிக்கும்

6. பசியின்மை போக்கும் சுறு சுறுப்பாக வைத்துயிருக்கும்

7. ரத்தத்தை சுத்தம் செய்கிறது ரத்த அழுத்தத்தை குறைகிறது

8. சர்க்கரை நோய் சமன் செய்ய பேருதவி புரிகிறது இன்சுலின் குறைபாட்டை சரி செய்கிறது

9.அஜீரண குறைபாட்டை குறுகிய காலத்தில் சரி செய்கிறது

10. உடலில்உள்ள நச்சுக்களை நீக்குகிறது

11. உடலில் உள்ள கொழுப்புகளை சமன் செய்கிறது

12.இதய நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்கிறது

13.பெண்களுக்கு அவர்களுடைய மாதவிலக்கின் போதும், கர்ப்பகாலத்திலும் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கிறது.

*இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்*

*தேவைப்படும் நபர்கள் உங்கள் முகவரியை Whatsapp அல்லது SMS மூலம் அனுப்பவும்*

*தொடர்புக்கு*

🌾 *9488909136*🌾
🌾 *9488909135*🌾

*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*

*இயற்கையாக விளைந்த பாரம்பரிய அரிசி வகைகள் சாப்பாடு மற்றும் இட்லி தோசை செய்ய கிடைக்கும்*

*பனங்கருப்பட்டி,நாட்டு சக்கரை கிடைக்கும்*

*நண்பர்களுக்கு பகிரவும்*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?”

யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள்.

“ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது சார்! எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்குது…”

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறேன், இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்!

இன்னும் ஆச்சரியங்கள் காத்திருந்தன.

“இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்பல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர்கூட சேந்தாப்புல நடக்க முடியல. ஆனா ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல.”

அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்குமா என்று வியக்கும்போதே இன்னொரு தகவலையும் சொன்னார். யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.

ஏன் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கின்றன? மற்ற நேரங்களில் என்ன செய்யும்?

“சாப்புடும்”

அவ்வளவு நேரமுமா?

“ஒரு நாளைக்கு 12 - 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்.”

அப்போ தூக்கம்?

“யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்.”

யானைகளை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. இவ்வளவு பிரமிப்பானவையா அவை..?

“இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சொல்லட்டா சார்..? எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் சார். 22 மாசம்!”

அம்மாடி..!

காடுகளின் மூதாய் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்!

மரங்களை நடுவதைவிட, சுற்றி இருக்கும் உயிர்களை பாதுகாப்போம். அவ்வுயிர்களைவிட நேர்த்தியாகவும் எளிமையாகவும் நம்மால் எதுவும் செய்துவிடமுடியாது.

- Naresh Green

Pc: cumbathan
Model: காட்டுராசா
Location : Thirunelli forest

Even though they have sanskirtiesed these. These are all tamil siddas invention. This predicts the calendar and futures.

 

தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :

1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.

அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்

கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்

மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்

புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்

மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்

உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்

சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்

விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்

மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு

உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி

அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி

பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.

செவ்வாய் :சுப்ரமண்யர்

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.

புதன் :விஷ்ணு

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.

குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.

சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.

சனி : எமன், சாஸ்தா

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).

ராகு: காளி, துர்கை

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.

கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

உடலுக்கு ஒன்பது வாசல் :

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்:

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

பெறுகள் பதினாறு வகைப்படும்:

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..

புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகள
ை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻